Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல தொலைக்காட்சியில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ்!

பிரபல தொலைக்காட்சியில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ்!
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:50 IST)
வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்போது ரிலீஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னை பல்லாவரத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்வு இப்போது விஜய் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் டீசர் வெளியானது