Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன் டிரைலரில் கமல் குரல்… மற்ற மொழிகளில்… விவரம்!

பொன்னியின் செல்வன் டிரைலரில் கமல் குரல்… மற்ற மொழிகளில்… விவரம்!
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:14 IST)
பொன்னியின் செல்வன் டிரைலர் இன்று வெளியாக உள்ள நிலையில் அது பற்றிய சுவாரஸ்யத் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஆகியவை பிரம்மாண்டமாக வெளியாக உள்ளன. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இதை மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாக உள்ள டிரைலரில் கமல்ஹாசனின் குரல் டிரைலரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல மற்ற மொழிகளில்  அனில் கபூர், ராணா டகுபடி,  பிருத்விராஜ் மற்றும் ஜெயந்த் கைகினி ஆகியோர் பேசியுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டே மாதங்களில் பிரேக்-அப்: என்ன ஆச்சு லலித்-சுஷ்மிதா சென் உறவு?