Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெந்து தணிந்தது காடு படமும் 3 மணிநேரம் ஓடுமா?.... வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வெந்து தணிந்தது காடு படமும் 3 மணிநேரம் ஓடுமா?.... வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:07 IST)
வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்போது ரிலீஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படம் சுமார் 3 மணி நேரம் அளவுக்கு ஓடும் என சொல்லப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வலிமை, கோப்ரா போன்ற படங்கள் 3 மணி நேரம் ஓடிய நிலையில் ரசிகர்களின் அதிருபதியை பெற்றன. அதனால் ரிலீஸுக்கு பின்னர் சில நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களுக்கு இதய நன்றி - விஜய்சேதுபதி பட இயக்குனர்