Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தியத்தைக் காப்பாற்றிய வெங்கட் பிரபு… புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!

சத்தியத்தைக் காப்பாற்றிய வெங்கட் பிரபு… புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!
, திங்கள், 22 மே 2023 (07:15 IST)
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஜூலை மாதத்துக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிவடையும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த மகிழ்ச்சியான அப்டேட்டை டிவிட்டரில் தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபி விஜய்யோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தோடு “என்னை நம்பியதற்கு நன்றி விஜய் அண்ணா. உங்களுக்கு செய்த சத்தியத்தின் படி பட அறிவிப்புக்குப் பின்தான் இந்த புகைப்படத்தை பகிர்கிறேன்” எனக் கூறி 10 மாதங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமெடி ப்ளஸ் சாகசம்… ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் பட டிரைலர் ரிலீஸ்!