Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமெடி ப்ளஸ் சாகசம்… ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் பட டிரைலர் ரிலீஸ்!

காமெடி ப்ளஸ் சாகசம்… ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் பட டிரைலர் ரிலீஸ்!
, திங்கள், 22 மே 2023 (06:59 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் நடிப்பில் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வி அடைந்தன. அதையடுத்து தற்போது அவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்த படம் ஜூன் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. நகைச்சுவைக்கும் சாகசத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘தளபதி 68’ படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!