ஷூட்டிங்கிற்காக பிஜி தீவுக்குச் சென்றுள்ள ‘பார்ட்டி’ படக்குழுவினர், அங்கேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பார்ட்டி’. சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், சம்பத், ஜெய், ஷாம், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பிரேம்ஜி, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
பிஜி தீவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 60 நாட்களையும் ஒரே ஷெட்யூலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு. இதுவரை 35 நாட்கள் ஷூட்டிங் முடிந்துள்ளது. இந்நிலையில், பிஜி தீவிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது படக்குழு. இதற்கான ஏற்பாட்டை நடிகர் ஜெயராம் செய்துள்ளார்.