Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெங்கட் பிரபுவின் பார்ட்டியில் பங்குபெறும் நட்சத்திர பட்டாளம்

வெங்கட் பிரபுவின் பார்ட்டியில் பங்குபெறும் நட்சத்திர பட்டாளம்
, திங்கள், 26 ஜூன் 2017 (12:38 IST)
சென்னை 28 2ம் பாகத்தினை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம் பார்ட்டி.  T.சிவா' வின் 'அம்மா கிரேஷன்ஸ்' தயாரிப்பில் உருவாக உள்ளது இந்த படம்.



இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு 'பார்ட்டி ' என படத்திற்கு பெயரிட்டுள்ளதால் , அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். வழக்கமாக வெங்கட் பிரபு படத்திற்கு யுவன் இசையமைப்பார். ஆனால் இந்த படத்திற்கு முதல் முறையாக பிரேம்ஜி இசையமைக்க உள்ளார்.

இப்படத்திற்க்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ஒன்று சேர்த்துள்ளார். சத்யராஜ் , நாசர் ,ஜெயராம் ,ரம்யா கிருஷ்ணன் ,ஜெய் ,ஷிவா , சம்பத் , 'கயல் ' சந்திரன் ,ரெஜினா கசன்டரா ,சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் 'பார்ட்டி' யில் கலக்க உள்ளனர். '' 'பார்ட்டி ' யின் படப்பிடிப்பு பிஜி தீவில் நடக்கவுள்ளது .'சரோஜா ' மூலம் எனக்கு இரண்டாவது தாய்வீடான அம்மா creations  நிறுவனத்துக்காக  இப்படத்தை இயக்குவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. 'பார்ட்டி' தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை என கூறினார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லி இயக்கி வரும் விஜய்யின் மெர்சல் படத்தில் ஜி.வி.பிரகாஷ்