Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கிய இயக்குனர் வெங்கட்பிரபுவின் ட்வீட்!

Advertiesment
விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கிய இயக்குனர் வெங்கட்பிரபுவின் ட்வீட்!

vinoth

, வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:26 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமுகவலைதளத்தில் ‘கோட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட் கொடுங்கள்” எனக் கேட்டார். அவருக்கு பதிலளித்த வெங்கட் பிரபு “அதற்கு இன்னும் காலம் வரவில்லை. ரொம்ப ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வந்துவிட்ட காரணத்தால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே அவர் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரின் கடைசி படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற கேள்வி அவரின் ரசிகர்களை தலையைப் பிய்த்து கொள்ள வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிரட்டலான மேக்கிங்கில் கவனம் ஈர்க்கும் மாதவன் & ஜோதிகாவின் ஷைத்தான் டிரைலர்!