Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் என்னைத் திட்டுவார்… அப்டேட் கொடுக்காமல் நழுவிய வெங்கட் பிரபு!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (14:03 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படம் மே மாதம் 12 ஆம் தேதி ரிலீஸாகி அட்டர் ப்ளாப் ஆனது. ஆனால் அந்த தோல்வி அவரை பாதிக்காதவண்ணம் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இப்போது அந்த படத்துக்கான திரைக்கதை பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில் சுனைனா நடித்துள்ள ரெஜினா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்ட போது விஜய் 68 பற்றி அப்டேட் கேட்கப்பட்டது. ஆனால் அதை சொல்ல மறுத்த வெங்கட் பிரபு “இப்போது அந்த படம் பற்றி பேசினால் விஜய் என்னைத் திட்டுவார். லியோ படம் ரிலீஸ் ஆனதும் அது பற்றி பேசிக் கொள்ளலாம்” என கூறி மழுப்பிவிட்டார்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் முடியும் முன்பே விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு என அறிவித்துள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments