Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 படத்துக்காக இந்தியா முழுக்க ஷூட் செய்யும் வசந்தபாலன்!

இந்தியன் 2 படத்துக்காக இந்தியா முழுக்க ஷூட் செய்யும் வசந்தபாலன்!
, வியாழன், 16 மார்ச் 2023 (08:33 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் செகண்ட் யூனிட் இயக்குனராக இயக்குனர் வசந்தபாலன் பணியாற்றுகிறார். படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை இந்தியா முழுவதும் படமாக்க வேண்டி இருப்பதால், அவர் தனி விமானத்தில் தனது குழுவோடு சென்று அந்த காட்சிகளைப் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்பேக் கொடுக்க மாஸான கதை கேட்டு வரும் நடிகர் கரண்!