Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வினொத் படத்தில் கமல் நடிக்கிறாரா இல்லையா? லேட்டஸ்ட் தகவல்!

வினொத் படத்தில் கமல் நடிக்கிறாரா இல்லையா? லேட்டஸ்ட் தகவல்!
, செவ்வாய், 14 மார்ச் 2023 (15:03 IST)
ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கமல் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கமல்ஹாசன் வினோத், படத்தில் நடிப்பது உறுதியில்லை என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள்தான் இப்போது நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலை கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தன்னுடைய யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷாலின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்… செம்ம காம்பினேஷன் ஆச்சே!