Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசன் மணிரத்னம் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

கமல்ஹாசன் மணிரத்னம் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!
, செவ்வாய், 14 மார்ச் 2023 (09:52 IST)
1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த படத்துக்காக கமல்ஹாசன் இரண்டாவது முறையாக தேசிய விருதைப் பெற்றது. படம் ரிலீஸ் ஆன போது கிடைத்த வரவேற்பை விட நாளாக ஆக அந்த படத்தின் மதிப்பு நாளுக்கு நாள் கூடி, இக்காலத்தைய ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து ஒரு கல்ட் திரைப்படமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

அந்த படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கும் என கமல்ஹாசன் தன்னுடைய நெருங்கிய நண்பரான பத்த்ரிக்கையாளர் சித்ரா லட்சுமனனிடம் கூறியதாக அவர் தன்னுடைய யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிவாசல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ஷூட்டிங் எப்போது தொடக்கம்?