Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் போஸ்டரை விட இது வேற லெவல்..! – “வாரிசு” Second look poster!

Varisu
, புதன், 22 ஜூன் 2022 (12:05 IST)
விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரது அடுத்த படமான “வாரிசு” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “வாரிசு”. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இன்று விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் கோர்ட் சூட்டுடன் அமர்ந்திருப்பது மட்டுமே இருந்தது. வெறும் போட்டோ போல இருந்த அது ஒருபக்கம் கொண்டாடப்பட்டாலும், இன்னொரு பக்கம் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்நிலையில் வாரிசு படத்தின் மற்ற இரண்டு போஸ்டர்கள் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வாரிசு படத்தின் இரண்டாம் கட்ட போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் குழந்தைகளோடு விஜய் உள்ளார். பக்கத்தில் கரும்பு கட்டும் கிடக்கிறது. பொங்கலுக்கு ரிலீஸ் என்பதன் குறியீடு போல. முதல் போஸ்டரை விட இரண்டாவது போஸ்டர் பலருக்கும் ரொம்பவே பிடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு!