Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“செகண்ட் லுக்கா… செஞ்சுட்டா போச்சு..” இன்றும் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!

“செகண்ட் லுக்கா… செஞ்சுட்டா போச்சு..” இன்றும் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!
, புதன், 22 ஜூன் 2022 (09:09 IST)
விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் மற்றும் ஃப்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் நேற்று மாலை வாரிசு என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஒரு குடும்ப செண்ட்டிமெண்ட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 
இந்நிலையில் இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் மேனாக இருப்பதை விட அண்ணனாக இருப்பது கடினம்… அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் டிரைலர்!