இயக்குனர் வெற்றிமாறனை இயக்குனர் சிகரம் என வன்னி அரசு தனது சமூக வலைத்தளத்தில் வர்ணித்த நிலையில், கே பாலசந்தர் ரசிகர்கள் கொந்தளிப்புடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
வன்னி அரசு தனது ட்விட்டரில், நேற்று மாலை தலைவருக்கு சிறப்பு திரையிடல் காட்டப்பட்டது. திரைப்படம் முடிந்ததும் இயக்குனர் சிகரம் திரு.வெற்றிமாறன் அவர்கள் மக்கள் செல்வன் திரு.விஜய்சேதுபதி அவர்கள் மற்றும் இயக்குனர் தமிழ் ஆகியோருக்கு எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
வர்க்கம்,சாதியம்,தத்துவம் என இன்றைய இளைய தலைமுறையினருக்கான வகுப்பாக மாற்றியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள். அவற்றை உள்வாங்கி மிகச்சிறப்பாக வகுப்பெடுத்திருக்கிறார்.
பெருமாள் வாத்தியார் விஜய்சேதுபதி அவர்கள் படம் முழுக்க போராட்டக்களத்தை தமது இசை மூலம் தீவிரப்படுத்தியிருக்கிறார். இசை ராஜா அவர்கள், கவிஞர் யுகபாரதி இன்னும் கூடுதலாக பொறுத்தது போதும் பொங்கி எழு என சூட்டை உருவாக்கியுள்ளார்.
திரு.சூரி மூலமாக காவல்துறைக்குள் என்ன நடக்கிறது என்பதை ஒரு கதையாகவும்
திரு.விஜய் சேதுபதி மூலமாக போராட்டக்களத்தில் என்ன நடந்தது என்பதை இன்னொரு கதையாகவும் மிகச்சிறப்பாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி இடது சாரி இயக்கத்திலிருந்து பிரிந்து தமிழக சோசலிச கட்சியை உருவாக்கி செயல்படும் பெருமாள் வாத்தியாரின் அரசியல் செயல்பாடும் அதன் பிந்தைய தத்துவ உரையாடலும் மிகச்சிறப்பு.
சினிமா எனும் வலிமை வாய்ந்த ஊடகத்தின் மூலம் மக்களை அரசியல்படுத்தும் மகத்தான முயற்சியில் இறங்கியுள்ள திரு.வெற்றிமாறன் அவர்கள் பணி சிறக்கட்டும்.
இளையதலைமுறையினர் ஒவ்வொருவரும் இப்படத்தை அவசியம் காண வேண்டும்.
தியேட்டருக்கு சென்று பாருங்கள்.
இவ்வாறு வன்னி அரசு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இயக்குனர் வெற்றி மாறனை இயக்குனர் சிகரம் என வன்னி அரசு பதிவு செய்தது பாலச்சந்தர் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்று பாலச்சந்தர் நினைவு நாள் அனுசரித்து வரும் நிலையில் அவரது பெயருக்கு அவமதிப்பு செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது