கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் வெளியானது.
படம் வெளியானது முதல் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படத்தின் ஒரே குறையாக படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் அரசியல் சித்தாங்களையோ பொன்மொழிகளையோ உதிர்த்துக் கொண்டே செல்கிறது. அந்த வசனங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு வசனங்களாக இருந்தாலும் சினிமாவில் அதைக் காட்சியாகதானே வைக்கவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விடுதலை 2 திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் சுமார் ஒருமணி நேரம் கூடுதலாக இருக்கும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். அதனால் ஓடிடியில் வெளியாகும் போது சுமார் 3 மணிநேரம் 45 நிமிடத்துக்கு மேல் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.