Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடவுள் சோதிக்கிறார்... காதல் வலிமையானது - கணவரை எண்ணி உருகும் வனிதா!

Advertiesment
கடவுள் சோதிக்கிறார்... காதல் வலிமையானது - கணவரை எண்ணி உருகும் வனிதா!
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:31 IST)
பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்த வனிதா அதன்பின் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும், இதுகுறித்து அவர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது திருமணம் குறித்து விமர்சித்த அனைவரையும் வனிதா வெளுத்து வாங்கினார்

அதில் குறிப்பாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி, சூரியா தேவி, எலிசபெத் என தன்னை பற்றி விமர்சித்த அத்தனை போரையும் வனிதா கடுமையாக திட்டி தீர்த்தார். வனிதாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் எதிர்ப்பாளர்கள் திணறினார்கள் என்பதும் ஒருசிலர் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிட்டார்கள். இருந்தும் இந்த பிரச்னை ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருந்த நிலையில் மீரா மிதுன் விவகாரம் வந்ததில் இருந்து வனிதாவை யாரும் நச்சரிக்கவில்லை. இதனால் நிம்மதியாக இருந்து வந்த வனிதாவுக்கு மேலும் ஓர் இடி விழுந்துள்ளது.

ஆம், வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள வனிதா, " திருமணம் என்பது சட்ட ஆவணம் மட்டுமல்ல..  இரு இதயங்களின் ஒன்றிணைவு மற்றும் வாழ்க்கையை ஒன்றாகக் கொண்டாடுவது..

நான் பைபிளின் மீது சிறந்த அல்லது மோசமான மற்றும் நோய் , ஆரோக்கியத்தில் சத்தியம் செய்தபோது அது கடவுளுக்கு அளித்த வாக்குறுதியாகும், சட்டத்திற்கு அல்ல. பீட்டர் பவுலும் நானும் பல கஷ்டங்களை இந்த 2020 இல் ஒன்றாக எதிர்கொண்டோம் .. நாங்கள் சிரித்தோம், நாங்கள் போராடினோம், நாங்கள் நேசித்தோம் , நாங்கள் அழுதோம்..கொரோனாவோ அல்லது வெறுப்பவர்களோ எங்களை ஒதுக்கி வைக்க முடியாது..

நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் எங்களுக்கு இந்த சோதனையைக் கொடுத்து வருகிறார். எங்கள் காதல் வலிமையானது. நிச்சயம் அதிசயம் நடக்கும். அவருக்காக நானும் எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்.எங்கள் மீது அக்கறை செலுத்தி நலம் விசாரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. வாழு, வாழ விடு என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகருக்கு ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர் எதிர்ப்பு....மற்ற நடிகர்களுக்கு பாராட்டு !