Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெண்டு கல்யாண விவகாரம் ஊதி பெருசாக்கும் பாஜக: வனிதா கைது?

Advertiesment
ரெண்டு கல்யாண விவகாரம் ஊதி பெருசாக்கும் பாஜக: வனிதா கைது?
, வியாழன், 23 ஜூலை 2020 (18:02 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் வனிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா சில நாட்களுக்கு முன்னதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து மணந்தார். பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர். வனிதாவின் இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பீட்டரின் முன்னாள் மனைவி எலிசெபத்தை வைத்து லட்சுமி ராமகிருஷ்ணன் விவாதித்த வீடியோ வைரலானதுடன், லட்சுமி ராமகிருஷ்ணனுடன் வனிதா சண்டையிட்ட வீடியோக்களும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி உள்ளன. வனிதாவின் செயல்பாடுகள் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட அதற்கு வனிதா பதிலளிக்க அந்த பக்கமும் பிரச்சினை தொடங்கியது.
 
இதனிடையே அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வரும் வனிதா சமீபத்தில், எங்க ஊர் தஞ்சாவூரில் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வது இயல்பு. ஏன் என் அப்பா விஜயகுமார் கூட இரண்டு திருமணங்கள் செய்தவர் தான். 
webdunia
தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த வீட்டில் பார்த்தாலும் அங்கு இரண்டு திருமணம்தான் பன்னிருப்பாங்க. அது தான் அங்க வழக்கம் என்றும் அது தவறு இல்லை என்றும்  என்று பேசியிருந்தார். 
 
இதனை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பாஜக புகார் அளித்துள்ளனர். அதில் வனிதா தனது இழிவான பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர். 
 
மேலும், அவர் தெரிவித்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் அவரை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை மறைத்த அரசு, 444 மரணத்தை மறைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது: உதயநிதி