Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் முதலாக நேரடியாக இந்தியில் ரிலீஸ் ஆகும் வலிமை!

முதல் முதலாக நேரடியாக இந்தியில் ரிலீஸ் ஆகும் வலிமை!
, புதன், 14 ஜூலை 2021 (16:00 IST)
வலிமை திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து விட்டு தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. வலிமை திரைப்படத்தின் இந்தி டப்பிங் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தமிழில் வெளியாகும் அன்றே இந்தியிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்குசாமி படத்தில் வில்லன் வேடம் ஏற்கிறாரா ஆர்யா?