Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்சிகள் மாறினாலும் தொழில் நேர்மையை மாற்றாத மகத்தான மனிதர்: டாடா குறித்து வைரமுத்து..!

Advertiesment
ஆட்சிகள் மாறினாலும் தொழில் நேர்மையை மாற்றாத மகத்தான மனிதர்: டாடா குறித்து வைரமுத்து..!

Siva

, வியாழன், 10 அக்டோபர் 2024 (14:46 IST)
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று காலமான நிலையில் அவரது புகழ் குறித்தும் அவரது மறைவுக்கு இரங்கல் அறிவித்தும் பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், கமல்ஹாசன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பெருந்தொழிலதிபர்
ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு
இந்தியா இரங்குகிறது

'நீ என்ன
பெரிய டாட்டாவா' என்று
சிறு வயது முதல்
புழங்கி வந்த பெயர்
இன்று மறைந்துவிட்டது

ஈட்டிய செல்வத்தில்
சரிபாதிக்கு மேல்
அறக்கட்டளை மூலம்
அறப்பணிகளுக்கு
அள்ளி வழங்கிய
ஒரு கொடையாளனை
தேசம் இழந்துவிட்டது

ஆட்சிகள்
மாறிக்கொண்டிருந்தாலும்
தன் தொழில் நேர்மையை
மாற்றிக்கொள்ளாத ஒரு
மகத்தான மனிதர்

இந்திய மனிதவளத்தைத்
தன் வேலைவாய்ப்புகளால்
செழுமை செய்தவர்

தன் நிறுவனங்களுக்கு
அவர் விட்டுச் சென்றிருக்கும்
தொழில் அறம்
நிலைக்கும் வரைக்கும்
அவர் புகழும் இருக்கும்

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்ரேல் - ஈரான் போரால் வீழ்ந்த பங்குச்சந்தை மீண்டும் உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!