தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.
அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்த வைரமுத்து அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலை முகநூலில் பகிர்ந்துள்ளார்.
அதில் ”நாளாயிற்று நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார் அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்..
செயற்கை நுண்ணறிவில் உங்களுக்குப் பயிற்சி உண்டா" என்றார் செயற்கை நுண்ணறிவைக் கவிதைக்குப் பயன்படுத்தினேன்; ஆனால் அதில் ஜீவன் இல்லை" என்றேன் அடுத்த படத்திற்கான தலைப்பைச் சொன்னார். "நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்" என்றேன் டெல்லிப் பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்துகொண்டேன் மகிழ்ந்து விடைகொண்டேன்" எனக் கூறியுள்ளார்.