தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கதாநாயகி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த படம் லைகாவின் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக கைவிடப்பட்டு விட்டதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் படக்குழு ஏற்கனவே மூன்று நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளதாகவும், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கை செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.