Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வட சென்னை 2 அவ்வளவுதான்… சூசகமாக பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன்!

வட சென்னை 2 அவ்வளவுதான்… சூசகமாக பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன்!

vinoth

, திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:39 IST)
வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக்கூட்டணியில் அமைந்த முக்கியமான படமாக வடசென்னை அமைந்தது. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக இருந்த நிலையில் முதல் பாகம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த பாகங்களுக்கான அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த வாத்தி பட விழாவில் இதுபற்றி நடிகர் தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் “அதை நீங்க வெற்றிமாறன் அலுவலகத்துலதான் கேக்கனும். கண்டிப்பா வடசென்னை 2 வரும்” எனக் கூறியிருந்தார்.

அதே போல வெற்றிமாறன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பலரும் வடசென்னை 2 பற்றி அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெற்றிமாறனிடம் வடசென்னை 2 பற்றி கேட்கப்பட்டது.

அப்போது அவர் “எனக்கு நான் இயக்கி முடித்துள்ள விடுதலை 2 படமே எப்போது வரும் என தெரியவில்லை. அதனால் வடசென்னை 2 எப்போது வரும் என்பது எனக்கு தெரியாது. அடுத்து வாடிவாசல் படம். அதன் பிறகு என்ன என்பது தெரியவில்லை” எனக் கூறினார். அந்த ரசிகர் ‘எந்த ஆண்டு என்றாவது கூற முடியுமா’ எனக் கேட்டார். அதற்கு வெற்றிமாறன் “அது அவ்வளவுதான்.. தெரியாது என்றால் அவ்வளவுதான்” என சூசகமாக வடசென்னை 2 படம் வராது என்பது போல கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் நிவின் பாலி & நயன்தாரா ஜோடி… டைட்டில் இதுதான்!