வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 என்ற படம் ஒரு பக்கம் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இயக்குனர் உள்ளிட்ட தகவல்களுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வெற்றிமாறன் அவர்களின் கிராஸ் ரூட் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது விமல் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்த படத்திற்கு மபொசி என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் இருந்து விமல் இந்த படத்தில் ஆசிரியர் கேரக்டரில் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தை பிரபல குணச்சித்திர நடிகரும் கன்னி மாடம் என்ற படத்தை இயக்கிய போஸ் வெங்கட் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விமல், சாயாதேவி நடிக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.