Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டப்படி விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா மனு.. நீதிமன்றத்தில் தாக்கல்..!

சட்டப்படி  விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா மனு.. நீதிமன்றத்தில் தாக்கல்..!

Siva

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:52 IST)
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் தற்போது இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ரஜினிக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருந்த நிலையில் திடீரென கடந்த 2022 ஆம் ஆண்டு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் இருவரும் சட்டப்படி விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சட்டப்படி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன், த்ரிஷா சம்பளத்தை நெருங்கிய சாய்பல்லவி.. சீதையாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா?