Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாடிவாசல் காளைகள்… புதிய தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கும் வெற்றிமாறன்!

வாடிவாசல் காளைகள்… புதிய தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கும் வெற்றிமாறன்!
, வியாழன், 28 அக்டோபர் 2021 (17:30 IST)
வாடிவாசல் படத்தில் காளைகள் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்காக அனிமேட்ரானிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தை வெற்றிமாறன் பயன்படுத்த உள்ளாராம்.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இருவரும் தங்கள் படங்களை முடித்த பிறகு வாடிவாசல் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் பல நூற்றுக்கணக்கான காளைகள் பயன்படுத்த பட உள்ளதால் அதற்காக அனிமேட்ரானிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் காளை சம்மந்தப்பட்ட காட்சிகளை உருவாக்க உள்ளார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாறன் படம் ஓடிடிக்கு சென்றது ஏன்? அதிர்ச்சி அளிக்கும் தகவல்!