Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

vinoth
திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (10:06 IST)
இந்திய அளவில் திரைப்படங்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் உயரிய விருதாக ‘தேசிய விருதுகள்’ உள்ளன. முன்பெல்லாம் வணிக ரீதியாக இல்லாமல் கலை ரீதியாக உருவாக்கப்படும் படங்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டன. அத்தகையப் படங்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் இருந்தன. ஆனால் இப்போது அந்த விருதுகளிலும் வணிக ரீதியாக உருவாக்கப்படும் படங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

இந்த ஆண்டு அயோத்தி, ஆடு ஜீவிதம் போன்ற படங்களுக்கு எந்த விருதுகளும் அளிக்கப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘உள்ளொழுக்கு’ படத்துக்காக விருது பெற்றுள்ள ஊர்வசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள அவர் “மலையாள சினிமாக்கள் தேசிய விருதுகள் குழுவால் புறக்கணிக்கப்படுகிறதா என்று தேசிய விருதுகள் பரிசீலனைக் குழு பதிலளிக்கவேண்டும். ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அதே போல ஆடு ஜீவிதம் படத்துக்கு எந்த பாராட்டும் கிடைக்கவில்லை.” என தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றியையும் தோல்வியையும் பார்த்துள்ளேன்: 33 வருட சினிமா பயணம் குறித்து அஜித் அறிக்கை..!

அஜித்தை திடீரென சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன்.. என்ன காரணம்?

மோசமான விமர்சனங்கள் வந்தும் வசூலில் அள்ளும் ‘கிங்டம்’… முதல் வார இறுதி கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

AI மூலமாக ராஞ்சனா க்ளைமேக்ஸ் மாற்றம்… இயக்குனரைத் தொடர்ந்து தனுஷும் அதிருப்தி!

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments