Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் அடுத்த படத்தில் சிம்பு பட நாயகிதான் ஹீரோயினா?

விஜய்யின் அடுத்த படத்தில் சிம்பு பட நாயகிதான் ஹீரோயினா?
, சனி, 2 ஜனவரி 2021 (16:30 IST)
நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களால் இப்போது அதிகம் பேசப்படும் படமாக தளபதி 65ம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இருந்து வருகின்றனர். தான் இயக்கிய ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருக்கும் விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இத்தனைக்கும் இந்த படத்தை இயக்க இருந்த இயக்குனர் முருகதாஸ் வெளியேறிய பின்னர் அவர் இடத்தை நிரப்ப விஜயாலும் சன் தொலைக்காட்சியாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்காக இப்போது கதாநாயகி தேர்வு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியின் பூமி மற்றும் சிம்புபின் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால் தேர்வாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாட்னஸ் அள்ளுது... கவர்ச்சி உடையில் ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் ஆத்மிகா!