Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தும் விஜய் சேதுபதி – முகிழ் வெப் சீரிஸ் டிரைலர் ரிலீஸ்!

மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தும் விஜய் சேதுபதி – முகிழ் வெப் சீரிஸ் டிரைலர் ரிலீஸ்!
, சனி, 2 ஜனவரி 2021 (13:16 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகள் நடிக்கும் முகிழ் வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது மட்டுமில்லாமல் படங்களைத் தயாரிப்பது, கதை வசனம் எழுதுவது என பலதரப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் மகன் சூர்யாவை ஏற்கனவே சிந்துபாத் திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். அதையடுத்து இப்போது அவர் மகள் ஸ்ரீஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முகிழ் என்ற வெப் சீரிஸை தயாரித்துள்ளார். அந்த வெப் சீரிஸில் விஜய் சேதுபதியும், ரெஜினா கசாண்ட்ராவும் முகில் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இதன் டிரைலர் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய வெப் சீரீஸாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயிரத்தில் ஒருவன் -2போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா ? நெட்டிசன்கள் கேள்வி