Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமேல் விஜய்யோடு அந்த படம் பண்னவே முடியாது – கௌதம் மேனன் ஓபன் டாக்!

Advertiesment
இனிமேல் விஜய்யோடு அந்த படம் பண்னவே முடியாது – கௌதம் மேனன் ஓபன் டாக்!
, சனி, 2 ஜனவரி 2021 (13:23 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் யோகன் அத்தியாயம் 1 என்ற திரைப்படம் உருவாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது.

அஜித், சூர்யா மற்றும் கமல் உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குனர் கௌதம் மேனன், விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அந்த படத்திற்கு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இந்த படத்தை படமாக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள், நியூயார்க்கில் லொகேஷன் பார்ப்பது என ஒரு சில கோடிகளும் செலவு செய்யப்பட்டது. 

ஆனால் திடீரென விஜய் இந்த படத்தில் இருந்து பின்வாங்கினார். இதனால் இந்த படம் டிராப் ஆனது. அதற்கு படம் தனது ரசிகர்களுக்குப் பிடிக்காது என விஜய் நினைத்ததே காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் மீண்டும் விஜய்யுடன் அந்த படம் தொடங்கபட வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளார். ஏனென்றால் அந்த படத்தின் திரைக்கதையை லேசாக மாற்றிதான் இமைபோல் காக்க எனும் படத்தை கௌதம் இயக்கி வருகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தும் விஜய் சேதுபதி – முகிழ் வெப் சீரிஸ் டிரைலர் ரிலீஸ்!