Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவும் இல்ல.. தனுஷும் இல்ல… என் வீட்டுக்காரர்தான் முதலில் சிக்ஸ் பேக் வச்சார்- பிரபல் நடிகை!

vinoth
திங்கள், 28 ஏப்ரல் 2025 (08:50 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 1 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யாவின் தந்தை சிவகுமார் “சூர்யாவுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் எவன் இருக்கான்? இதை நான் பணிவோடுதான் சொல்றேன்” என்று பேசியிருந்தார். இந்நிலையில் சிவகுமாரின் பேச்சு சம்மந்தமாகப் பேசிய நடிகர் விஷால் “தனுஷ்தான் முதலில் பொல்லாதவன் படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்தார்.  அதுக்கப்புறம் நானும் 2008 ஆம் ஆண்டு சத்யம் திரைப்படத்துக்காக வைத்தேன். இது தெரியாமல் சிவகுமார் பேசியிருப்பார்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகையான உமா ரியாஸ் இதுபற்றி பேசும்போது “தனுஷுக்கு முன்பே என்னுடைய கணவர் ரியாஸ் கான் 2003 ஆம் ஆண்டே வின்னர் படத்தில் சிக்ஸ் பேக் வைத்திருந்தார்.” எனக் கூறி வின்னர் படத்தில் ரியாஸ் கான் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் படத்துக்காகதான் அதை செய்தேன்… நீங்கள் யாரும் அதை செய்யாதீர்கள்.. சூர்யா கோரிக்கை!

23 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அகிலா? - பட ப்ரொமோஷனில் வைத்து காதலை சொன்ன இயக்குனர்!

பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments