குறும்பட இயக்குனராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணிக் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அவரின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்குப் பிறகு சூர்யாவை வைத்து ரெட்ரோ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் இதே நாளில் நானியின் ஹிட் 3 படமும் ரிலீஸாகிறது. இந்தப் பட ப்ரமோஷனில் கலந்துகொண்டு வரும் நடிகர் நானி “எனக்குக் கார்த்திக் சுப்பராஜின் கதைகள் மிகவும் பிடிக்கும். அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதற்காக சில கதைகளைப் பேசியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.