Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

Advertiesment
vetri duraisamy

Sinoj

, செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (18:10 IST)
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய  தன் நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்தார்.
 
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஷங் நாலா பகுதியில் இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கடந்த 4ஆம் தேதி கவிழ்ந்தது.
 
விபத்து குறித்து தகவலறிந்த சென்ற மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத்தை மீட்டனர். ஆனால், வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போன நிலையில், வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்  சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் சட்லஜ் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. இது சைதை துரைசாமியின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வெற்றியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
 
இமாச்சலில் கார் விபத்திற்குள்ளாகி, சட்லஜ் நதியில் மூழ்கி உயிரிழந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மக்ன வெற்றி துரைசாமியின் உடல் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி ஆதரவு