Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லெஜண்ட் சரவணனின் ஜோடிக்கு UAE-ன்கோல்டன் விசா!

Advertiesment
லெஜண்ட் சரவணனின்  ஜோடிக்கு UAE-ன்கோல்டன் விசா!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:29 IST)
லெஜண்ட் சரவணனின் ஜோடியாக நடித்துவரும் நடிகை ஊர்வசி ரவுடாலாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி என்று கூறப்படும் லெஜெண்ட் சரவணன் தற்போது ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி விரையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லெஜண்ட் சரவணனின் ஜோடியாக நடித்துவரும் நடிகை ஊர்வசி ரவுடாலாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இந்த விவாவை வைத்திருப்பதால் அவர்கள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன் போலவே கவுரவப்படுத்தப்படுவார்கள் எனக் கூறியுள்ளது.

மேலும், UAE அரசின் கோல்டன் விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற சாதனையைப் பெற்றுள்ளார் ஊர்வசி ரவுடலா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒடிடியில் வெளியாகும் விஜய்சேதுபதி- நயன்தாரா படம்?