Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழர்களை இழிவுப்படுத்தும் ஃபேமிலிமேன்; அமேசானை புறக்கணிக்க வேண்டும்! – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

தமிழர்களை இழிவுப்படுத்தும் ஃபேமிலிமேன்; அமேசானை புறக்கணிக்க வேண்டும்! – ட்விட்டரில் ட்ரெண்டிங்!
, திங்கள், 7 ஜூன் 2021 (08:58 IST)
அமேசானில் சமீபத்தில் வெளியான ஃபேமிலிமேன் தொடர் தமிழர் உணர்வுகளை புண்படுத்துவதாக அமேசானை புறக்கணிக்க கோரி ட்விட்டரில் ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

ஈழ தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சைக்குள்ளான ஃபேமிலிமேன் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. முன்னதாக இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் கூறி வந்த நிலையில், அதில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும், தொடர் வெளியானதும் பார்த்துவிட்டு தமிழ் அமைப்புகளே பாராட்டும் என்றும் அதன் இயக்குனர்கள் அறிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அமேசான் ப்ரைமில் ஃபேமிலி மேன் தொடர் வெளியாகி பலரின் அதிருப்திகளை சந்தித்துள்ளது. ஈழத்தமிழர்கள் குறித்த தவறான பார்வையை ஃபேமிலிமேன் முன் வைப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மேலும் சிலர் தமிழகத்தையும், தமிழர்களையுமே வன்முறை நிறைந்தவர்களாக ஃபேமிலிமேன் சித்தரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமான தொடர்களை  வெளியிடும் அமேசான் ப்ரைமை தமிழகர்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜமௌலி இயக்கும் குறும்படம்… யாரைப் பற்றி தெரியுமா?