Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபேமிலி மேனை விடாத சீமான்... அமேசானுக்கு கடும் எச்சரிக்கை!

Advertiesment
சீமான்
, ஞாயிறு, 6 ஜூன் 2021 (12:48 IST)
பேமிலி மேன் 2 இணையத்தொடர் ஒளிபரப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

 
ஈழ தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சைக்குள்ளான ஃபேமிலிமேன் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. முன்னதாக இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் கூறி வந்த நிலையில், அதில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும், தொடர் வெளியானதும் பார்த்துவிட்டு தமிழ் அமைப்புகளே பாராட்டும் என்றும் அதன் இயக்குனர்கள் அறிக்கை விடுத்திருந்தனர்.
 
இந்நிலையில் ஃபேமிலிமேன் தொடர் குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த தொடரில் ஐஎஸ் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் ஈழ போராளிகளை தொடர்பு படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி பட்டேன். ஆப்ரகாம் லிங்கன் சொல்வது போன்று ’குற்றம் குறை கூறுபவர்களை புறந்தள்ள கற்றுக்கொள்’ங்கிற மாதிரி “போடா’ என சொல்லிட்டு போய்விடுவோம்” என்று கூறியுள்ளார்.
 
இதோடு நிறுத்தாமல், தமிழர்களுக்கு எதிரான பேமிலி மேன் 2 இணையத்தொடர் ஒளிபரப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அமேசான் நிறுவனம் இதனை செய்ய தவறினால், அந்நிறுவனத்தின் எல்லா சேவைகளையும் உலகத்தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம் என எச்சரித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினர்கள்: ஜெயரஞ்சனுக்கு துணைத்தலைவர் பதவி