நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென கிரிப்டோ கரன்சி குறித்த பதிவு வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பதும், அவர் சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் தெரிந்தது. குறிப்பாக, ட்விட்டரில் மட்டும் அவருக்கு ஆறு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அடுத்தடுத்து த்ரிஷா ட்விட்டர் பக்கத்தில் இரண்டு கிரிப்டோ கரன்சிகள் குறித்த பதிவுகள் வெளியாகி, அதில் சில லிங்குகள் பதிவாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, "த்ரிஷா பெயரிலேயே கிரிப்டோகரன்சி உருவாக வாய்ப்பு இல்லை, எனவே இது ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திரிஷா என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சற்றுமுன் அந்த பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டுள்ளது.