Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் கிரிக்கெட் களத்தில் டிவில்லியர்ஸ்.. மகனின் ஆசையை நிறைவேற்ற எடுத்த முடிவு!

Advertiesment
மீண்டும் கிரிக்கெட் களத்தில் டிவில்லியர்ஸ்.. மகனின் ஆசையை நிறைவேற்ற எடுத்த முடிவு!

vinoth

, புதன், 29 ஜனவரி 2025 (09:07 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் வித்தியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். அவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

அதன் பின்னர் தன்னுடைய ஏற்பட்ட பார்வை குறைபாடு காரணமாக வெகு விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் தன்னுடைய சமூகவலைதள சேனல் மூலமாக  கிரிக்கெட் குறித்து தொடர்ந்து தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவெடுத்துள்ளார். அதன்படி லெஜண்ட்ஸ் சாம்பியன்ஸ்ஷிப் 2025 ஆம் ஆண்டுக்கான தொடரில் தென்னாப்பிரிக்கா  சாம்பியன்ஸ் அணிக்காக அவர் விளையாடவுள்ளார்.  மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்தது குறித்து பேசியுள்ள அவர் “என் மகன் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது காண ஆசைப்படுகிறான். அவனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

336 ரன்கள் சேர்த்தபின்னர் அவுட்டான திலக் வர்மா… டி 20 போட்டிகளில் புதிய சாதனை!