Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இணைந்த அனிமல் பட நாயகி திர்ப்தி டிம்ரி ஒப்பந்தம்!

Advertiesment
பிரபாஸ்

vinoth

, செவ்வாய், 27 மே 2025 (09:39 IST)
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனிமல் படம் ஆணாதிக்கக் கருத்துகள் விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தின் மீதும் இந்த விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி கதாநாயகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அடுத்து அவர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஒரு காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் ஆனார். ஆனால் தற்போது ஸ்பிரிட் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் சந்தீப்புடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகவே தீபிகா வெளியேறியதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் தற்போது இந்தி நடிகை ‘திரிப்தி டிம்ரி’ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சந்தீப் இயக்கிய ‘அனிமல்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரியின் ‘மாமன்’ திரைப்படம்!