Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் அஞ்சலி

Advertiesment
அம்பேத்கர்

Mahendran

, சனி, 6 டிசம்பர் 2025 (10:07 IST)
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 70வது நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்பட்டது.
 
இதையொட்டி, புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
 
பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில், "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு தலைமையும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசிய பயணத்தை வழிநடத்துகின்றன. ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் பாடுபடும்போது அவரது லட்சியங்கள் ஒளியூட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
 
மேலும், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி, அம்பேத்கரின் சேவையை போற்றினர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?