Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Advertiesment
Mission Impossible Final Reckoning Review in Tamil

vinoth

, வியாழன், 24 ஜூலை 2025 (14:55 IST)
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும்  தொடர்வரிசை படங்களில் ஒன்று மிஷன் இம்பாசிபிள். அந்த வரிசையில் எட்டாவது பாகமான Mission Impossible Final Reckoning மே மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

டாம் க்ரூஸுக்கு உலகம் முழுவதுமே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரது மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களில் உலக அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் பல விதமான வில்லன் கும்பல்களை எதிர்கொண்டு வெற்றிக் கண்டு வந்தவர் முதல்முறையாக இந்த பாகத்தில் ஏஐ வில்லன் ஒன்றை எதிர்கொண்டு வீழ்த்தினார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தும் அதன் அதிக பட்ஜெட் காரணமாக பெரிய லாபம் இல்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது கமல் ரசிகனா?... இரு உன்ன பாத்துக்குறேன் – லோகேஷை மிரட்டிய ரஜினிகாந்த்!