காதல், டிஷ்யூம் மற்றும் கூடல் நகரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சந்தியா தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக இருந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அத்ன் பிறகு சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.
இந்தத் தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்குப் பின் பெரிதாகப் படங்களில் நடிக்காமல் இருந்த சந்தியா தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதுவும் சினிமாவில் இல்லை சின்னத்திரை சீரியலில்.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மனசெல்லாம் என்ற சீரியலில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் சந்தியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனசெல்லாம் சீரியலுக்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.