Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

vinoth
ஞாயிறு, 15 ஜூன் 2025 (13:33 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது.  ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது.

தற்போது படம் வெளியாகி இரண்டாவது வாரத்தைக் கடந்துள்ள நிலையில் இன்னமும் இந்திய அளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கூடக் கடக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. நேற்று விடுமுறை நாளான சனிக்கிழமையில் கூட ஒரு கோடி ரூபாய் வசூலைக் கடக்கவில்லை என sacnilk இணையதளம் ட்ராக் செய்து தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை 45 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய அளவில் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

ஹீரோவாக நடிக்கும் படத்துக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளும் லோகேஷ் கனகராஜ்!

என் மகன் சீக்கிரமே இயக்குனர்… எனக்கும் ஒரு வாய்ப்புண்டு – பார்த்திபன் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments