ஜானு மீது காதல் மழை பொழியும் ரசிகர்கள்! த்ரிஷா உருக்கமான நன்றி
, வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:07 IST)
"96" படத்தில் ஜானுவாக நடித்துள்ள த்ரிஷாவை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். அதற்கு த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய பின்னூட்டங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அனைவருக்கும் நன்றி. தொடர்ச்சியாக அன்பை பொழிந்து வருகிறார்கள்... 96 படத்தில் வரும் ஜானுவை, தங்களுடைய காதலுடன் தொடர்புபடுத்தி நேசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த படத்தில் பணியாற்றிய நாங்கள் அனைவரும் காதலை உணர்ந்து இருப்பதால், குழுவாக சேர்த்து சிறிய அதிசயத்தை நிகழ்த்தியுள்ளோம்" என்றார்.
அடுத்த கட்டுரையில்