Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

Advertiesment
Mahesh babu

Prasanth Karthick

, திங்கள், 28 ஏப்ரல் 2025 (11:45 IST)

ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்க பணம் பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜராக மறுத்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு.

 

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமாக உள்ள நடிகர்களில் முக்கியமானவர் மகேஷ்பாபு. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல விளம்பர படங்களிலும் மகேஷ்பாபு நடித்து வருகிறார். அவ்வாறாக அவர் சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்திருந்தார்.

 

இதற்காக அவர் ரூ.5.90 கோடி பணம் சம்பளமாக பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அந்த நிறுவனங்கள் மீது மக்கள் பணத்தை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் அமலாக்கத்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில் நடிகர் மகேஷ்பாபுவிடமும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது.

 

இதற்காக நடிகர் மகேஷ்பாபு இன்று அமலாக்கத்துறையிடம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தான் தற்போது பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகவும், அதனால் விசாரணை தேதியை வேறு தேதிக்கு ஒத்திவைக்கும்படியும் மகேஷ்பாபு தரப்பில் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்டேஜ் பாடல் தந்த மாஸ் ஃபீலிங்கை இழந்த ரசிகர்கள்… ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸில் நடந்த மாற்றம்!