தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனுஷ் நடிக்கும் ஒரு படம் மற்றும் சுந்தர் சியின் சங்கமித்ரா ஆகிய படங்களை தொடங்கி பாதியிலேயே கிடப்பில் போட்டது.
ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா. இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் அடுத்த கட்டத்துக்கு செல்லாமலேயே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் தொடங்கலாமா என சுந்தர் சி ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இப்போது லண்டனுக்கு சென்று லைகா நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது இந்த படத்துக்காக தேனாண்டாள் பிலிம்ஸ் செய்த செலவை கொடுத்து படத்தை லைகா நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக சொலல்ப்படுகிறது. லைகா நிறுவனம் கொடுக்கும் படத்தை தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் தொடங்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.