Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா? – அரசியல் கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா!

காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா? – அரசியல் கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா!
, ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (15:02 IST)
திரிஷா ராங்கி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் சில படங்களில் நடித்து வருகிறார் பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு அவரின் மார்க்கெட் மீண்டும் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் இவர் நடித்து சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த ராங்கி திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ஏ ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார்.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் திரிஷாவிடம் “காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா?” எனக் கேட்ட போது, அந்த தகவலில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அரசியலுக்கும் தனக்கும் சுத்தமாக சம்மந்தமே இல்லை என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீரா மிதுன் மீதான பண மோசடி வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!