உலகம் நாகரீகத்தின் பாதையில் அடியெடுத்து வைத்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டது.
ஆனாலும் இன்னும் பழைமையின் பிடியில் இந்தியா சிக்குண்டு இருக்கிறது என்பதற்கு ஆங்காங்கே நடந்துவரும் சாதிக் கொடுமைகளும், பழைமை வாதமும்,மூடப் பழக்க வழக்கங்களே ஆகும்.
இந்நிலையில் வடமாநிலத்தில் புதிதாகத் திருமணமான இளம் தம்பதியர்க்கு நடக்கும் சடங்குகள் சில இடங்களில் மாறுபடும்.
இந்நிலையில் ஒரு இளம் பெண் தனது கணவனின் கால்களைக் கழுவி அந்த நீரை அப்படியே குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பதிவிட்ட பிரபல அரசியர் விமர்சகரும், சமூக ஆர்வலருமான சுமந்த் ராமன், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படியும் இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.