Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’ #we stand with vijay Sethupath’’ விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள் !

Advertiesment
’’ #we stand with vijay Sethupath’’ விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள் !
, புதன், 14 அக்டோபர் 2020 (18:57 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறித்து உருவாகும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. ஆனால் #ShameOnVijaySethupathi என்று சினிமா ரசிகர்கள் தமிழ் ஆர்வலர்கள் டிவிட்டரில் ஹேஸ்டேக் பதிவிட்டு வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதிக்கு ஆதரவாக  அவரது ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியில் மிகசிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். தமிழரான இவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து விஜய் சேதுபதி ”முரளிதரன் 800” என்ற படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில் படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியானது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நாளை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் நேற்று  முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 என்ற போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் முரளிதரன் கண்டியில் பிறந்தவராக இருந்தாலும் விடுதலைப் புலிகள் போர்  நடத்திய போது சிங்கள ராணுவத்திற்கு ஆதரவாக நின்று தமிழர்களுக்கு துரோகம் செய்தார். அதனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று பலரும் குரல் கொடுத்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்று ஹேஸ்டேக் பதிவுட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் சேதிபதியின் ரசிகர்கள் we stand with vijay Sethupathi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட்டிங் செய்து  வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு தள்ளுபடி !