Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை…’’ யாரைச் சொல்கிறார் கமல் ???

Advertiesment
’’ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை…’’ யாரைச் சொல்கிறார் கமல் ???
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:49 IST)
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடம் கமல் உள்ளார்.

இந்நிலையில், இன்று காலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆர் குறித்து பதிவிட்டிருந்தார் கமல். அதில், புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்னொரு பதிவிட்டுள்ளார். அதில்,

இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு. #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல என்று தெரிவித்துள்ளார்.. #kamal

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்கும் நயன்தாரா !!